..:: Money Spidery Financial Marketting ::.. Headline Animator

Thursday, March 1, 2012

எல்.ஐ.சி.யின் புதிய திட்டம் "ஜீவன் விருத்தி"

மும்பை: இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகமான எல்.ஐ.சி. ஜீவன் விருத்தி என்ற புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. மற்ற இன்சூரன்ஸ் திட்டத்தைப் போல் அல்லாமல் சிங்கிள் பிரீமியத்துடன் இத்திட்டம் விளங்கும்.

இது தொடர்பாக ஆயுள்காப்பீட்டு நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

ஜீவன் விருத்தி திட்டமானது வாடிக்கையாளர்களுக்கு பல நன்மைகள் அளிக்கக் கூடியது.
இத்திட்டத்துக்கான காலம் 120 நாட்கள். இதனைத் தேர்வு செய்யும் வாடிக்கையாளர் உயிரிழக்க நேரிடும் நிலையில் அவர் செலுத்திய பிரீமியத்தைப் போல் 5 மடங்கு தொகை கிடைக்கும்.

ஜீவன் விருத்தியில் 8 வயது முதல் 50 வயது வரையிலானோர் இணைந்து கொள்ள்லாம். மிக குறைந்த தொகை கொண்ட ஸ்கீம் ரூ1.50 லட்சம், மிகக் குறைந்த தொகையாக ஆண்டுக்கு ரூ30 ஆயிரத்தை குறைந்தபட்சமாக செலுத்தலாம். அதன் பிறகு ஆயிரங்களாக அதிகரித்துக் கொள்ளலாம். ஜீவன் விருத்தியில் இணைவோருக்கு ஓராண்டு கழித்து கடன் வசதியும் கிடைக்கும்

குழந்தைகளின் எதிர்கால கல்விக்காகவும் இளைஞர்கள் தங்களது சேமிப்புக்காகவும் இத்திட்டத்தில் இணையலாம். ஜீவன் விருத்தியை தேர்வு செய்வோருக்கு 80சி பிரிவின் கீழ் வருமான வரிச் சலுகையும் கிடைக்கும்.

மேலும் விவரங்களுக்கு www.licindia.in என்ற இணையதளத்தைப் பார்க்கலாம்

No comments:

Post a Comment