..:: Money Spidery Financial Marketting ::.. Headline Animator

Thursday, March 1, 2012

எல்.ஐ.சி.யின் புதிய திட்டம் "ஜீவன் விருத்தி"

மும்பை: இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகமான எல்.ஐ.சி. ஜீவன் விருத்தி என்ற புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. மற்ற இன்சூரன்ஸ் திட்டத்தைப் போல் அல்லாமல் சிங்கிள் பிரீமியத்துடன் இத்திட்டம் விளங்கும்.

இது தொடர்பாக ஆயுள்காப்பீட்டு நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

ஜீவன் விருத்தி திட்டமானது வாடிக்கையாளர்களுக்கு பல நன்மைகள் அளிக்கக் கூடியது.

Monday, February 20, 2012

வீடு, வாகனங்களுக்கான இன்சூரன்ஸ் கட்டணம் அதிகரிக்கிறது?


டெல்லி: வீடு, வாகனங்கள், சொத்துகள் உள்ளிட்ட பொது இன்சூரன்ஸ் கட்டணங்கள் ஏப்ரல் மாதம் மூலம் அதிகரிக்கப்பட உள்ளது.

தேசிய மறுகாப்பீட்டாளர்கள் மறும் பொது காப்பீட்டுக் கழகங்கள் நட்டத்தை ஏற்படுத்தும் வர்த்தக நடவடிக்கைகளை நிறுத்துமாறு மத்திய நிதி அமைச்சகம் அறிவுறுத்தல் விடுத்துள்ளது. நட்டத்தை ஏற்படுத்தும் வகையிலான வர்த்தகங்களுக்கு இன்சூரன்ஸ் செய்வோர்தான் பொறுப்பேற்க வேண்டும் என்றும் மத்திய அரசு கூறியுள்ளது.

வருமானவரி செலுத்த சென்னையில் சிறப்பு ஏற்பாடு - ரிசர்வ் வங்கி அறிவிப்பு


  சென்னை: வருமான வரி செலுத்துவோருக்காக சென்னையில் சிறப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளது ரிசர்வ் வங்கி.

இதுகுறித்து ரிசர்வ் வங்கியின் மண்டல இயக்குநர் என்.எஸ்.விஸ்வநாதன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

மார்ச் மாத கடைசியில் ரிசர்வ் வங்கியில் வருமான வரியை செலுத்த வருபவர்களின் எண்ணிக்கை மிக அதிக அளவில் இருப்பதை கருத்தில் கொண்டு கூடுதல் கவுண்டர்கள் அமைக்கப்பட்டுள்ளது. கடைசி நேர நெரிசலைத் தவிர்த்து, குறித்த நாளுக்கு முன்னதாகவே வரியை செலுத்துமாறு வேண்டுகிறோம்.

Monday, February 13, 2012

வீட்டுக் கடன்களுக்கான வரி தள்ளுபடி ரூ.3 லட்சமாக உயர்த்த தீவிர பரிசீலனை


புதுடில்லி:வீட்டுக் கடன்களுக்கான வட்டி மீதான வரித் தள்ளுபடி வரம்பை தற்போதுள்ள 1.5 லட்சத்திலிருந்து 3 லட்சம் ரூபாயாக உயர்த்த, மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. வீட்டு வசதித் துறையை மேம்படுத்துவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

தற்போது வீட்டுக் கடன் பெற்றுள்ளவர்கள், அந்த கடன்களுக்காக செலுத்தும் வட்டியில் 1.5 லட்சம் ரூபாய் வரை வரித் தள்ளுபடி சலுகை பெறலாம். இது தவிர, அசலாகச் செலுத்தும் தொகையிலும் 1 லட்சம் ரூபாய் வரையிலான தொகைக்கு வரிச் சலுகை பெறலாம். தற்போது ஒவ்வொரு ஆண்டும், சொத்துக்களின் விலையும், வட்டி வீதமும் மாறிக் கொண்டே இருப்பதால், இந்த வரித் தள்ளுபடி வரம்பை மாற்றி அமைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

பரஸ்பர நிதி நிறுவனங்களின் சொத்து மதிப்பு ரூ.6.60 லட்சம் கோடி


புதுடில்லி : நடப்பு 2012ம் ஆண்டு, ஜனவரி மாதம் துவக்கம் முதல், நாட்டின் பங்கு வர்த்தகம் சிறப்பாக உள்ளது. இதையடுத்து, பரஸ்பர நிதி திட்டங்களில் மேற்கொள்ளப்படும் முதலீடும் உயர்ந்துள்ளது. சென்ற ஜனவரி மாதத்தில், பரஸ்பர நிதி நிறுவனங்கள் நிர்வகிக்கும் சொத்து மதிப்பு, 6 லட்சத்து 59 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. 
புள்ளிவிவரம் : இது, சென்ற டிசம்பர் மாதத்தில் நிர்வகிக்கப்பட்ட சொத்து மதிப்பை விட, 8 சதவீதம் அதிகம் என, கிரிசில் ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், சென்ற டிசம்பர் மாதத்தில், பங்கு வர்த்தகத்தில் ஏற்பட்ட சுணக்க நிலையால், பரஸ்பர நிதி திட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட முதலீடு குறைந்திருந்தது என்பதுடன், பல நிறுவனங்கள் முன்கூட்டிய வரியை செலுத்துவதற்காக, இத்திட்டங்களில் மேற்கொண்டிருந்த முதலீட்டை வெகுவாக விலக்கிக் கொண்டன. இதனால், சென்ற டிசம்பர் மாதத்தில், பரஸ்பர நிதி நிறுவனங்களால், நிர்வகிக்கப்பட்ட சொத்து மதிப்பு குறைந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ஜனவரி மாதத்தில் மட்டும், பரஸ்பர நிதி நிறுவனங்கள் நிர்வகிக்கும் சொத்து மதிப்பு, அதற்கும் முந்தைய மாதத்தை விட, 47 ஆயிரத்து 700 கோடி ரூபாய் உயர்ந்துள்ளது. சென்ற ஜனவரி மாதத்தில், நிதிச் சந்தையில், பரஸ்பர நிதி நிறுவனங்களால், நிர்வகிக்கப்பட்ட சொத்து மதிப்பு, 26 ஆயிரத்து 400 கோடி ரூபாய் உயர்ந்து, 1 லட்சத்து 48 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது, டிசம்பர் மாதத்தில், 1 லட்சத்து 21 ஆயிரம் ரூபாயாக இருந்தது.
பங்கு வர்த்தகம் : கணக்கீட்டு மாதத்தில், பங்கு வர்த்தகம் நன்கு இருந்ததால், பரஸ்பர நிதி நிறுவனங்கள், பங்குச் சார்ந்த முதலீட்டுத் திட்டங்களில் நிர்வகிக்கப்படும் சொத்து மதிப்பு, 11 சதவீதம் வளர்ச்சியடைந்து, அதாவது, 18 ஆயிரத்து 400 கோடி ரூபாய் அதிகரித்து, 1 லட்சத்து 80 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
கடந்த 2011ம் ஆண்டு அக்டோபர் மாதத்திற்கு பிறகு, சென்ற ஜனவரி மாதத்தில், பங்கு வர்த்தகம் நன்கு இருந்தது. அம்மாதத்தில், மட்டும் "சென்செக்ஸ்' 15 சதவீதம் அதிகரித்திருந்தது. இதையடுத்து, பங்கு சார்ந்த பரஸ்பர நிதி நிறுவனங்கள், தங்களின் அளவீடாக கடைபிடிக்கும் எஸ் அண்டு பி, சி.என்.எக்ஸ். நிப்டி, குறியீட்டு எண், 12 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளது. மேலும், 2010ம் ஆண்டின் செப்டம்பர் மாதத்திற்கு பிறகு, சென்ற ஜனவரியில், "கில்ட் பண்ட்' திட்டங்களில், மேற்கொள்ளப்பட்ட முதலீடு, 521 கோடி ரூபாயாக உயர்ந்திருந்தது.
அதேசமயம், வருவாய் சார்ந்த பரஸ்பர நிதித் திட்டங்களிலிருந்து, சென்ற ஜனவரி மாதத்தில், 2,900 கோடி ரூபாய் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது. கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் மாதத்திற்கு பிறகு, சென்ற ஜனவரி மாதத்தில் தான், வருவாய் சார்ந்த பரஸ்பர திட்டங்களிலிருந்து, இந்த அளவிற்கு தொகை வெளியேறி உள்ளது. ஏனெனில், பல முதலீட்டாளர்கள், குறுகிய கால அடிப்படையிலான முதலீட்டுத் திட்டங்களுக்கு பதிலாக, அதிக வருவாய் அளிக்கக் கூடிய, நீண்ட கால அடிப்படையிலான முதலீட்டுத் திட்டங்களில் முதலீடு மேற்கொண்டது தான் இதற்கு காரணம் என, கிரிசில் நிறுவனம் தெரிவித்துள்ளது.
புதிய திட்டங்கள் : நிலையான அளவில் வருவாய் அளிக்கக் கூடிய புதிய பரஸ்பர நிதித் திட்டங்களில், முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதையடுத்து, இப்பிரிவில், சென்ற ஜனவரி மாதத்தில் மட்டும், குறிப்பிட்ட கால அளவு கொண்ட, 49 புதிய பரஸ்பர நிதித் திட்டங்கள் வெளிவந்தன. 
இதன் வாயிலாக, 7,844 கோடி ரூபாய் திரட்டி கொள்ளப்பட்டது. இவை தவிர, சென்ற ஜனவரி மாதத்தில், மேலும் மூன்று புதிய பரஸ்பர நிதித் திட்டங்கள் வெளியிடப்பட்டன. இதன் வாயிலாக, 657 கோடி ரூபாய் திரட்டப்பட்டது.
சென்ற ஜனவரி மாதத்தில், நிதிச் சந்தை, கில்டு பண்டு, கோல்டு ஈ.டி.எப்., ஆகிய மூன்று பரஸ்பர நிதித் திட்டங்களிலுமாக மேற்கொள்ளப்பட்ட நிகர முதலீடு முறையே, 26 ஆயிரத்து 429 கோடி, 521 கோடி மற்றும் 82 கோடி என்றளவில் இருந்தது.

லட்சுமி விலாஸ் பேங்க்கடன் பத்திரங்கள் வெளியீடு


மும்பை:தனியார் துறையைச் சேர்ந்த, லட்சுமி விலாஸ் பேங்க், அதன் மூலதன இருப்பு விகிதத்தை அதிகரித்து கொள்ளவும், நீண்ட கால ஆதார நிதி தேவைக்காகவும் கடன் பத்திரங்களை வெளியிடுகிறது.பங்குகளாக மாறாத, திரும்ப பெறத்தக்க, இக்கடன் பத்திர வெளியீட்டின் வாயிலாக, 250 கோடி ரூபாயை திரட்ட திட்டமிட்டுள்ளது. ஆறு மற்றும் 10 ஆண்டுகளில் முதிர்வடையக் கூடிய இக்கடன் பத்திரங்களில், மேற்கொள்ளப்படும் முதலீட்டிற்கு, 11.40 சதவீத வட்டி கிடைக்கும்.

ஆயில் இந்தியா இலவச பங்குகள் அறிவிப்பு


புதுடில்லி : ஆயில் இந்தியா நிறுவனம், அதன் பங்குதாரர்களுக்கு, இரண்டு பழைய பங்குகளுக்கு, (பங்கின் முகமதிப்பு ரூ.10) மூன்று புதிய பங்குகள் என்ற விகிதத்தில் இலவச பங்குகளை வழங்க முடிவு செ#துள்ளது. இதற்கு இந்நிறுவனத்தின் இயக்குனர்கள் குழு ஒப்புதல் அளித்துள்ளது. மேலும் இந்நிறுவனம், இரண்டாவது முறையாக 100 சதவீத, இடைக்கால டிவிடெண்டை அறிவித்துள்ளது. இதன்படி, பங்கு ஒன்றிற்கு 10 ரூபா# கிடைக்கும். ஏற்கனவே, இந்நிறுவனம் 250 சதவீத இடைக்கால டிவிடெண்டை வழங்கியது. இதன்படி, பங்கு ஒன்றிற்கு 25 ரூபா# வழங்கப்பட்டது.