..:: Money Spidery Financial Marketting ::.. Headline Animator

Monday, February 6, 2012

வருமான வரி விலக்கு உச்ச வரம்பு ரூ.2 லட்சமாக உயர்கிறது!

டெல்லி: வருமான வரி விலக்கு உச்ச வரம்பை, ரூ. 2 லட்சமாக உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு மத்திய பட்ஜெட்டில் வெளியாகலாம்.

இப்போது வருமான வரி விலக்குக்கான உச்ச வரம்பு ரூ.1.8 லட்சமாக உள்ளது (அதாவது, நமது ஆண்டு ஊதியத்தில் ரூ. 1.8 லட்சம் வரை வரி இல்லை). இதை கடந்த பட்ஜெட்டிலேயே ரூ. 2 லட்சமாக நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி உயர்த்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அல்வா கொடுத்துவிட்டார்.
இந் நிலையில் இதை ரூ. 2 லட்சமாக உயர்த்த வேண்டும் என நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரை செய்துள்ளது. மேலும் ஆண்டுக்கு ரூ. 10 லட்சத்துக்கும் அதிகமான வருமானத்திற்கு மட்டுமே, 30 சதவீத வருமான வரி விதிக்கலாம் என்றும் கூறியுள்ளது.

இப்போது ஆண்டு வருமானம் ரூ. 8 லட்சமாக இருந்தாலே 30 சதவீத வருமான வரி விதிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந் நிலையில் வரும் மார்ச் மாத மத்தியில் தாக்கலாக உள்ள மத்திய பட்ஜெட்டில் அதனால், வருமான வரி விலக்குக்கான உச்ச வரம்பு அதிகரிப்பு மற்றும் வருமான வரி வீதங்களில் மாற்றம் போன்றவை தொடர்பான அறிவிப்புகள் வெளியாகலாம் என்று தெரிகிறது.

No comments:

Post a Comment