..:: Money Spidery Financial Marketting ::.. Headline Animator

Monday, February 6, 2012

செல்போன் இணைப்புகளுக்கான விதிமுறைகள்: 'டிராய்'க்கு சுப்ரீம் கோர்ட் கெடு!

டெல்லி: மொபைல் போன் இணைப்பு வழங்குவதற்கான விதிமுறைகளை கடுமையாக்குவது குறித்து, ஆலோசனையை தெரிவிக்க தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையமான 'டிராய்க்கு' இறுதி வாய்ப்பு அளிக்கப்படுவதாகம், இந்த வாய்ப்பை 'டிராய்' சரியாக பயன்படுத்தி உரிய ஆலோசனைகளை வழங்காவிட்டால், நீதிமன்றமே சில கடும் உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டியிருக்கும் என்றும் சுப்ரீம் கோர்ட் எச்சரித்துள்ளது.

இது குறித்து கொல்கத்தாவைச் சேர்ந்த ஒருவர் தாக்கல் செய்த பொது நல மனுவில், போலி ஆவணங்களைக் கொடுத்து செல்போன்களுக்கான சிம் கார்டுகளை வாங்குவது அதிகரித்து வருகிறது. டெல்லி, மும்பை போன்ற இடங்களில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் தொடர்புடைய தீவிரவாதிகளும் பல்வேறு குற்ற நடவடிக்கைகளில் தொடர்புடையவர்களும் போலி ஆவணங்கள் மூலம் வாங்கிய சிம் கார்டுகளையே பயன்படுத்தியுள்ளது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
போஸ்ட் பெய்டு இணைப்புகளை வழங்க செல்போன் நிறுவனங்கள் விதிமுறைகளைக் கடுமையாக பின்பற்றுகின்றன. ஆனால், ப்ரீபெய்டு இணைப்புகளை வழங்குவதில் விதிமுறைகளை கடைபிடிப்பதில்லை.

இதனால் மொபைல் போன் இணைப்பு வழங்குவதற்கான விதிமுறைகளை கடுமையாக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.எச். கபாடியா, நீதிபதிகள் ஏ.கே.பட்நாயக், ஸ்வதந்தர் குமார் ஆகியோர் பிறப்பித்த உத்தரவில்,

இந்த விஷயம் தொடர்பாக தொலைத் தொடர்புத்துறையின் நெறிமுறைகளை கடுமையாக்க ஆலோசனைகள் வழங்குமாறு டிராய்க்கு ஏற்கெனவே உத்தரவிடப்பட்டிருந்தது. எனினும் அவர்கள் சரியான ஆலோசனைகளை இதுவரை வழங்கவில்லை.

இப்போது மீண்டும் டிராயின் ஆலோசனையைக் கேட்கிறோம். இது அவர்களுக்கு வழங்கப்படும் கடைசி வாய்ப்பு. அடுத்த முறை அவர்கள் சரியான விதிகளை வகுத்து மத்திய அரசிடம் வழங்கத் தவறினால், நீதிமன்றமே நெறிமுறைகளை வழங்கும். இரு வாரங்களுக்குப் பின் மீண்டும் இதனை விசாரிப்போம் என்று நீதிபதிகள் கூறினர்.

No comments:

Post a Comment