..:: Money Spidery Financial Marketting ::.. Headline Animator

Friday, February 3, 2012

பாங்க் ஆப் இந்தியா லாபம் 10% உயர்ந்தது

சென்னை: முன்னணி அரசு வங்கிகளில் ஒன்றான பாங்க் ஆப் இந்தியா, அக்டோபர் & டிசம்பர் 2011 காலாண்டில் ரூ716 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது. முந்தைய ஆண்டின் இதே காலத்தின் நிகர லாபமான ரூ653 கோடியை விட இது 9.64 சதவீதம் அதிகம். வங்கியின் நிகர வட்டி வருமானம் ரூ2,068 கோடி. இது முந்தைய ஆண்டின் இதே காலத்தில் ஈட்டிய ரூ1,987 கோடியைவிட 4.1 சதவீதம் அதிகம். வராத கடன் சதவீதம் 3.02 சதவீதத்தில் இருந்து 2.74 சதவீதமாக குறைந்துள்ளது என்று பாங்க் ஆப் இந்தியா செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

No comments:

Post a Comment