..:: Money Spidery Financial Marketting ::.. Headline Animator

Friday, February 3, 2012

புதிய 100 ரூபாய்வெளியிடுகிறதுரிசர்வ் வங்கி


சென்னை:  ரிசர்வ் வங்கி, புதிய 100 ரூபாய் நோட்டுகளை, விரைவில் வெளியிடுகிறது. வங்கி வெளியிட்டுள்ள அறிக்கை:ரிசர்வ் வங்கி கவர்னர் டி.சுப்பாராவ் கையெழுத்துடன், நோட்டின் பின்புறத்தில், அச்சிடப்பட்ட ஆண்டுடன் கூடிய, மகாத்மா காந்தி வரிசை நோட்டுகளில், உள்பொதிந்து அச்சடிக்கப்படும், "ஆர்' என்ற ஆங்கில எழுத்துடன், புதிய 100 ரூபாய் நோட்டுகள் வெளியிடப்படுகின்றன.இந்த நோட்டுகள், ஏற்கனவே வெளியிடப்பட்ட மகாத்மா காந்தி வரிசை, 2005 நோட்டுகளை, எல்லா விதத்திலும் ஒத்ததாக இருக்கும். மேலும், இதற்கு முன் வெளியிடப்பட்ட, 100 ரூபாய் நோட்டுகளும், தொடர்ந்து செல்லுபடியாகும்.இவ்வாறு, ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.

No comments:

Post a Comment