புதுடில்லி: வரும் 2015ம் ஆண்டில், இந்தியா, சீனா இடையிலான பரஸ்பர வர்த்தகம், 10 ஆயிரம் கோடி டாலராக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என, வெளியுறவுத் துறை அமைச்சர் கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.இதுகுறித்து கிருஷ்ணா மேலும் கூறியதாவது:இந்தியாவின் நட்புக்குரிய நாடுகளுள் ஒன்றாக சீனா விளங்குகிறது. சென்ற நிதியாண்டில், இரு நாடுகளுக்கு இடையில், வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து, அவ்வாண்டில், 7,400 கோடி டாலர் (3 லட்சத்து 70 ஆயிரம் கோடி ரூபாய்) மதிப்பிற்கு வர்த்தகம் நடைபெற்றுள்ளது.வரும், 2015ம் ஆண்டில், இரு நாடுகளுக்கு இடையில், 10 ஆயிரம் கோடி டாலர் (5 லட்சம் கோடி ரூபாய்) மதிப்பிற்கு வர்த்தகம் புரிவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment