புதுடில்லி: விமான நிறுவனங்களின் நீண்டநாள் கோரிக்கையான விமான எரிபொருட்களை நிறுவனங்களை நேரடியாக இறக்குமதி செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதனால் விமான நிறுவனங்கள் உற்சாகமடைந்துள்ளனர். மத்திய அமைச்சர் அஜித் சிங் தலைமையில் விமானத்துறைக்கான அமைச்சரவை கூட்டம் இன்று நடந்தது. கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அஜித் சிங், விமானப் போகுவரத்து நிறுவனங்கள் நேரடியாக விமான எரிபொருளை இறக்குமதி செய்து கொள்ளலாம். மேலும் ஏர் இந்தியா கட்டணங்களை திருத்தியமைக்கவும் அமைச்சரவை குழு ஒப்புதல் அளித்துள்ளது என்றார்.
மத்திய அரசின் இந்தமுடிவால் எரிபொருளுக்கான வரி குறைவதோடு, அதன் விலையும் குறையும். இது விமான நிறுவனங்களுக்கு சாதகமாக அமையும் என்பதால் விமான நிறுவனங்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
No comments:
Post a Comment