இந்தியாவுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையிலான தடைகளற்ற வர்த்தகத்துக்கான ஒப்பந்தம் தொடர்பிலான பேச்சு வார்த்தைகளில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக இருதரப்பும் தெரிவித்துள்ளன.
இது தொடர்பாக புதுதில்லியில் நடந்த பேச்சுவார்த்தைகளின் முடிவில் செய்தியாளர்களிடம் பேசிய ஐரோப்பிய ஒன்றிய தலைவர் ஜோஸே மனுவெல் பர்ரோஸோ,இந்த ஆண்டு இறுதிக்குள் இந்த ஒப்பந்தம் ஏற்பட்டுவிடும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
இந்த ஒப்பந்தமானது உலகில் ஏற்படுத்தப்படும் மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தாமாக இருக்கும் என்று தெரிவித்த அவர், இதன் மூலம் 170 கோடி மக்கள் பயன்பெறுவார்கள் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
இந்த எண்ணிக்கையானது உலக மக்கள் தொகையில் கால்வாசி பேர் என்பது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பான பேச்சுவார்த்தைகளை இந்தியாவும் ஐரோப்பிய ஒன்றியமும் 2007 ஆம் ஆண்டு முதல் நடத்திவருகின்றன.
No comments:
Post a Comment