..:: Money Spidery Financial Marketting ::.. Headline Animator

Wednesday, February 8, 2012

அன்னிய முதலீட்டால், கடந்த ஏழு வாரங்களில்... பங்குகளின் சந்தை மதிப்பு ரூ.10 லட்சம் கோடி உயர்வு- பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து


கடந்த ஏழு வாரங்களில் மட்டும் பங்குச் சந்தையில், பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனப் பங்குகளின் சந்தை மதிப்பு 10 லட்சம் கோடி ரூபாய் உயர்ந்து 62 லட்சத்து 72 ஆயிரத்து 757 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.கடந்த ஆண்டு பங்குச் சந்தை வீழ்ச்சியால், நிலை குலைந்திருந்த பங்கு முதலீட்டாளர்களுக்கு இது, மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பங்கு முதலீடு:ஒரு நிறுவனத்தின் மொத்த பங்குகளை, பங்கின் சந்தை விலையைக் கொண்டு பெருக்கினால், அந்நிறுவனத்தின் சந்தை மதிப்பு கிடைக்கும்.கடந்த ஆண்டு, இந்திய பங்குச் சந்தையில், அன்னிய நிதி நிறுவனங்களின் பங்கு முதலீடு வெகுவாக குறைந்திருந்தது. ஆனால், நடப்பாண்டு தொடக்கம் முதல், இத்தகைய முதலீடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக, கடந்த ஆண்டு டிசம்பர் 20ம் தேதி முதல், நடப்பாண்டு பிப்ரவரி 6ம் தேதி வரை, அன்னிய நிதி நிறுவனங்கள், இந்திய பங்குச் சந்தைகளில், 16 ஆயிரத்து 422 கோடி ரூபாய் அளவிற்கு முதலீடு செய்துள்ளன.

பணவீக்கம்:இது, பங்குச் சந்தையின் ஏற்றத்திற்கு, வழிவகுத்துள்ளது. பணவீக்கம் குறைந்துள்ளதும், எதிர்பார்த்ததை விட தொழில் உற்பத்தி குறியீடு அதிகரித்துள்ளதும், ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கான ரொக்க இருப்பு விகிதத்தை 0.50 சதவீதம் குறைத்துள்ள காரணத்தாலும், அன்னிய நிதி நிறுவனங்களை பங்குச் சந்தை ஈர்த்துள்ளது. பங்குச் சந்தையில் முதலீடுகள் அதிகரித்து வருவதையடுத்து, பல்வேறு நிறுவனப் பங்குகளின் விலை ஏற்றம் கண்டு, அவற்றின் ஒட்டு மொத்த சந்தை மதிப்பு உயர்ந்து வருகிறது.

கடந்த டிசம்பர் 20ம் தேதி, மும்பை பங்குச் சந்தையின் 'சென்செக்ஸ்' குறியீட்டு எண் மிகவும் குறைந்து, 15,175 புள்ளிகள் என்ற அளவில் இருந்தது. இது, நடப்பு பிப்ரவரி 6ம் தேதி நிலவரப்படி, 16.7 சதவீதம் உயர்ந்து 17,707 புள்ளிகளாக உயர்ந்திருந்தது.இதே காலத்தில், மும்பை பங்குச் சந்தையில், "பீ.எஸ்.-200' குறியீட்டு எண் கணக்கிட உதவும் நிறுவனங்களில், 28 நிறுவனப் பங்குகள் விலை, இரு மடங்கு அதிகரித்துள்ளது. இவற்றில், ஜே.எஸ்.டபிள்யூ. ஹோல்டிங்ஸ், எஸ்.டி.சி. இந்தியா, ஹிந்துஸ்தான் காப்பர், ஐ.வி.ஆர்.சி.எல்., கே.எஸ்.கே. எனர்ஜி வென்ச்சர்ஸ் ஆகியவை குறிப்பிடத்தக்கவையாகும்.

துறைகள்:இதே காலத்தில், மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களில், 240 நிறுவனப் பங்குகள் விலை, தலா 50 - 99 சதவீதம் அதிகரித்துள்ளது. 806 நிறுவனப் பங்குகள் விலை, 25 - 50 சதவீதம் உயர்ந்துள்ளது.நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்துள்ளதால், அந்நிறுவனப் பங்குகளின் சந்தை மதிப்பும் அதிகரித்துள்ளது. அதிக அளவில் சந்தை மதிப்பு உயர்வைக் கண்டதில், வங்கித் துறை முன்னணியில் உள்ளது. 

பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள வங்கிகளின் ஒட்டு மொத்த சந்தை மதிப்பில், 1 லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாய் அதிகரித்துள்ளது. எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களின் சந்தை மதிப்பில், 50 ஆயிரம் கோடி ரூபாய் கூடியுள்ளது. மின்சாரம், மின்வினியோக நிறுவனங்களின் சந்தை மதிப்பில், 75 ஆயிரம் கோடி ரூபாய் அதிகரித்துள்ளது.

இத்துடன் சுரங்கம், உலோகம், தொலைத்தொடர்பு, பொறியியல், தகவல் தொழில்நுட்பம், வாகனம் மற்றும் மருந்து ஆகிய நிறுவனப் பங்குகளின் சந்தை மதிப்பு, துறை வாரியாக தலா 25 ஆயிரம் கோடியில் இருந்து, 50 ஆயிரம் கோடி ரூபாய் வரை அதிகரித்துள்ளது.

அன்னிய நிதி நிறுவனங்கள்:பங்குச் சந்தையின் ஏற்றம் குறித்து கோட்டக் செக்யூரிட்டீஸ் தலைவர் (அடிப்படை ஆராய்ச்சி) திபென் ஷா கூறும்போது, "ஜனவரியில் இருந்து பங்குச் சந்தை சிறப்பாக வளர்ச்சி கண்டு வருகிறது. ஐரோப்பிய மத்திய வங்கியின் நடவடிக்கையால் பணப்புழக்கத்தை அதிகரித்துள்ளது. அதனால், அன்னிய நிதி நிறுவனங்களின் முதலீடு இந்திய பங்குச் சந்தைகளில் பெருகியுள்ளது' என்றார்.

No comments:

Post a Comment