சென்னை :சோழா எம்எஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனம், "பேமிலி புளோட்டர் ஹெல்த் லைன்' என்ற புதிய காப்பீட்டு திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
இது குறித்து இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் எஸ்.எஸ். கோபாலரத்னம் கூறியதாவது: இப்புதிய திட்டத்தில், ஸ்டாண்டர்டு, சுப்பீரியர் மற்றும் அட்வான்ஸ்டு என்ற மூன்று வகையான விருப்ப தேர்வுகள் உள்ளன. இதன்படி, மகப்பேறு, ஆயுர்வேதம், பல் மற்றும் கண் சிகிச்சைகளுக்கான காப்பீட்டு வசதிகளை வாடிக்கையாளர்கள் உடனடியாக பெறலாம்.
மேற்கண்ட ஏதேனும் ஒரு திட்டத்தின் வாயிலாக, கணவன், மனைவி மற்றும் மூன்று குழந்தைகள் உள்ளிட்ட அனைவரும் பயன்பெறும் வகையில் இத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் இணையும் வாடிக்கையாளர்களுக்கு 80 (டீ) பிரிவின் கீழ் வருமான வரி விலக்கும் உண்டு. இத்திட்டத்தில் சேருவதற்கான வயது வரம்பு 65 ஆக உள்ளது. மேலும், வாடிக்கையாளர்களின் ஆயுட் காலம் முழுவதும் இப்பாலிசியை புதுப்பித்துக் கொள்ளலாம். 55 வயது வரையிலான வாடிக்கையாளருக்கு மருத்துவ பரிசோதனை தேவையில்லை என்பது இத்திட்டத்தின் தனிச்சிறப்பாகும்.
வாடிக்கையாளர், வசதிக்கேற்பவும், குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கு ஏற்பவும், 2 லட்சம் முதல் 15 லட்சம் ரூபாய் வரையில் காப்பீடுகளை மேற்கொள்ளலாம்.நடப்பு நிதியாண்டின் முதல் மூன்று காலாண்டுகளில், நிறுவனத்தின் மொத்த பிரிமிய வருவாய் 1,000 கோடி ரூபாயை தாண்டியுள்ளது. நடப்பு நிதியாண்டில் 1,350 கோடி ரூபாய் பிரிமிய வருவாய் ஈட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கோபாலரத்னம் கூறினார்.
No comments:
Post a Comment