சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளதால் இந்தியாவில் பெட்ரோலியத்தின் விலை உயர்கிறது
பெட்ரோல் விலையை சர்வதேச கச்சா எண்ணெய் விலை நிலவரத்திற்கு ஏற்ப ஒவ்வொரு மாதமும் 1ம் திகதி மற்றும் 16ம் திகதி மாற்றியமைக்க எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதியளித்துள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்ததாலும், கச்சா எண்ணெய் இறக்குமதிக்கான செலவு அதிகரித்துள்ளதாலும் பெட்ரோல் விலை லீட்டருக்கு ரூ. 2 வரை உயரும் என்று தகவல்கள் வெளியானது.
இந்நிலையில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கணிசமாக உயர்ந்துள்ளது.
மேலும் கச்சா எண்ணெயை உற்பத்தி செய்யும் நாடுகளில் கடும் குளிர் காரணமாக உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
சில வளைகுடா நாடுகளில் நிலவும் அரசியல் நெருக்கடியான சூழ்நிலைகளும் கச்சா எண்ணெய் உற்பத்தியில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன.
எனவே இத்தகைய காரணங்களால் இந்தியாவில் பெட்ரோலியம் பொருட்கள் விலையை உயர்த்த வேண்டிய நிர்பந்தம் உருவாகியுள்ளது.
ஈரான், லிபியா ஆகிய அரபுநாடுகளிலிருந்து வரும் கச்சா எண்ணெயின் அளவு அதிகமாக குறைந்து விட்டது. இதனால் கச்சா எண்ணெய் பெறுவதில் சர்வதேச சந்தையில் சீனாவுடன் இந்தியா கடுமையாக போராட வேண்டியதுள்ளது.
இதற்கிடையே அரசின் நிதி நிலையும் திருப்தியாக இல்லை. எனவே வருமானத்தை உயர்த்த பெட்ரோலியப் பொருட்கள் விலையை அதிகரிக்க வேண்டிய கட்டாயத்தில் மத்திய அரசு உள்ளது.
No comments:
Post a Comment